தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
![]()
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தளம் பேரூராட்சியில் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சத்யவதி இவர் புத்தளம் பேரூராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறாமலேயே அந்த பணிகள் நடைபெற்றதாக போலியாக ஆவணங்களை தயார் செய்து ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேரூராட்சி விதிகளை மீறி மன்ற தீர்மான பதிவேட்டு மினிட் புத்தகத்தில் கணக்குத் தொகைகளை சட்டவிரோதமாக வெள்ளை மை கொண்டு அழித்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது மேலும் அந்த பகுதியில் இவர் முறைகேடு செய்ததாக கூறி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடைபெறாத பணிகளை நடைபெற்றதாக கூறி முறைகேடில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவி சத்தியவதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முறைகேடு செய்த ஒப்பந்ததாரரை மன்ற தீர்மான கருப்பு பட்டியலில் வைக்க வலியுறுத்தியும் திமுக மற்றும் பாஜக வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அங்கிருந்து பேரூராட்சி தலைவி ஓட்டம் பிடித்தார்…

