ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் முதன்முறையாக பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் கர்ப்ப கால செலவுகள், பிறந்த குழந்தையின் மருத்துவ  செலவுகளுக்கான காப்பீட்டை முதல் நாளிலில் இருந்தே வழங்கும் புதிய காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது

Loading

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் முதன்முறையாக பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் கர்ப்ப கால செலவுகள், பிறந்த குழந்தையின் மருத்துவ  செலவுகளுக்கான காப்பீட்டை முதல் நாளிலில் இருந்தே வழங்கும் புதிய காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது!
வழக்கமான சுகாதார காப்பீடு பாதுகாப்பு தவிர, , பிரசவத்துக்கு முந்தைய காலம், கர்ப்ப கால செலவுகள் மற்றும் பிறந்த குழந்தையின் மருத்துவ செலவுகளை காப்பீடு ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்தே வழங்கும் பாலிசியாக  ஸ்டார் வுமென் கேர் இன்சூரன்ஸ் பாலிசி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார் வுமென் கேர் இன்சூரன்ஸ் பாலிசியின் [Star Women Care Insurance Policy] கீழ், முதன்முறையாக பெண்களில்  அனைத்து வயதையும் மையப்படுத்திய தாய்மார்கள் இந்த பலன்களை பெறலாம். இந்த பாலிசி, வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் உள்ள பெண்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய பாதுகாப்பை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த பாலிசியில், அசிஸ்டட் ரீப்ரொடக்‌ஷன் சிகிச்சை, பிரசவத்துக்கு முந்தைய மற்றும் பிரசவ கால செலவுகள், கருப்பையில் கரு அறுவை சிகிச்சைகள் புதிதாக பிறந்த குழந்தைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், பிறவி குறைபாடுகள் மற்றும் கரு சிதைவு மற்றும் தடுப்பூசி செலவுகள்  ஆகியவை அடங்கும். மேலும் மெட்டபாலிக் ஸ்கிரீனிங், குழந்தை மருத்துவர் மற்றும் மருத்துவ ஆலோசனைகள், வாலண்டரி ஸ்டெரிலைசேஷன் மற்றும் முன்னெச்சரிக்கை நோய் தடுப்பு மருத்துவ பரிசோதனை
ஆகியவற்றுக்கான காப்பீட்டையும் இந்த பாலிசி வழங்குகிறது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *