இளம் வீரர்களுக்காக ரோகித் செய்யும் தியாகம்.. வியந்து போன டிராவிட்.. பயன்படுத்தி கொள்வாரா CSK வீரர்?
லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மேற்கொள்ள உள்ள தியாகம், பயிற்சியாளர் டிராவிட்டையே வியப்படைய செய்துள்ளது.
விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஷிகர் தவான், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் முன்னணி வீரர்கள் அணியில் இல்லை.
இதனால் இளம் வீரர்கள் சிலருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதில் ஒரு சிக்கல் எழுந்தது.
அணியில் சிக்கல்
ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் இந்த தொடரில் களமிறங்க வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியில் உள்ள இளம் வீரர்களில் இரண்டு பேர் தொடக்க வீரர்கள். ஆனால் தற்போது அணியில் ஒருவருக்கு மட்டுமே தொடக்க வீரராக இடம் உள்ளது.
யாருக்கு வாய்ப்பு?
ருத்துராஜ் மற்றும் இஷான் கிஷன் இருவருமே உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் தொடக்க வீரராக களமிறங்குவார்கள். நடுவரிசையில் விளையாடிய அனுபவம் இஷான் கிஷனுக்கு இருந்தாலும், அவருக்கு அந்த பொறுப்பு செட் ஆகாது. இதனால் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடும் ருத்துராஜ்க்கும் வாய்ப்பு தராமல் இருக்க முடியாது.
ரோகித் தியாகம்
இதனால் குழம்பி இருந்த ரோகித், தன்னுடைய இடத்தையே இளம் வீரர்களுக்காக ரோகித் சர்மா தியாகம் செய்ய உள்ளார். ஆம், தொடக்க வீரருக்கு பதிலாக ரோகித், கடந்த போட்டியில் போல் நடுவரிசையில் களமிறங்க உள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மாவுக்கு நடுவரிசையில் விளையாடிய அனுபவம் உள்ளது.
அனுபவம் தேவை
மேலும், கோலி, சூர்யகுமார் மற்றும் ரிஷப் பண்ட் இல்லாததால், அனுபவம் இல்லாத நடுவரிசையாக இந்திய அணி உள்ளது. இதனால் ரோகித் சர்மா நடுவரிசையில் களமிறங்க முடிவு எடுத்துள்ளார். இதன் மூலம் தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் விளையாட உள்ளனர். ரோகித் சர்மாவின் இந்த முடிவால் பயிற்சியாளர் டிராவிட்டே வியப்பில் உள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.