மருத்துவமனைக்கு போதையுடன் வந்த அரசு மருத்துவர்!! தூக்கி கடாசிய ஊழியர்கள்!!

Loading

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனை நாமக்கல்-மோகனுார் சாலையில் அமைந்துள்ளது.

இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு நாமக்கல், கரூர், திருச்சியிலிருந்தும் தினசரி 1000க்கும் மேற்பட்ட உள்ள மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தமிழகத்திலேயே சிறந்த மருத்துவமனை எனத் தரச்சான்று பெற்ற மருத்துவமனை இது.
இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சிவானந்தம். இவர் அளவுக்கதிகமாக மது குடித்து விட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். போதை தலைக்கேறியதால் அங்கேயே மட்டையானார். மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கைதாங்கலாக மருத்துவமனை வளாகத்திலேயே எக்ஸ்ரே அறையில் படுக்க வைத்தனர்.

போதை இறங்கிய பிறகு மாலையில் தான் எழுந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவரே குடிபோதையில் தள்ளாடி மயங்கிக் கீழே விழுந்து கிடந்தது மருத்துவமனைக்கு வரும் மற்ற மருத்துவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரையும் அருவருப்புக்குள்ளாக்கியது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *