தலித் ஆக்சன் கமிட்டி பொதுச்செயலாளர் போலீசாரால் தடுத்து நிறுத்தம் தஞ்சையில் பரபரப்பு
தலித் ஆக்சன் கமிட்டி பொதுச்செயலாளர் போலீசாரால் தடுத்து நிறுத்தம் தஞ்சையில் பரபரப்பு
சென்னை ஐ.ஐ.டியில் உதவி பேராசிரியர்கள் , உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு
எஸ்.சி. , எஸ்.டி. , இனத்தை சேர்ந்த வர்களுக்கு மத்திய அரசின் முறையான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படவில்லை என்றும் இதுகுறித்து ஐ.ஐ.டி. பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இந்திய தலித் ஆக்ஷன் கமிட்டியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் . தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலிஸ் நிலையத்திலும் புகார் செய்திருந்தார் . இந்த நிலையில் சென்னை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து ஐ.ஐ.டி. முறைகேடு குறித்து மனு கொடுப்பதற்கு அனுமதி கோரியிருந்தார் . இதனைத்தொடர்ந்து
தஞ்சையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ராஜா சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தபோது வல்லம் மற்றும் மருத்துவக் கல்லூரி போலீசார் ராஜாவை சென்னைக்கு செல்லவிடாமல் நேற்று முன்தினம் இரவு தடுத்து நிறுத்தினர் . இதுகுறித்து ராஜா கூறுகையில் , ” சென்னைக்கு வரும் துணை ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி இருந்தேன் ஆனால் என்னை சென்னைக்கு போகவிடாமல் போலீசார் தடுத்து விட்டனர் என்றார் .