திருச்சியில் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் 2,061வது சித்த மருத்துவ முகாம்

Loading

திருச்சி:

திருச்சியில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் 2061வது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் கரோனா காலத்தில் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம் மூலம் பலர் நோய்களில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இந்த வகையில்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் 2,061வது இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்தியசாலையில் இந்த இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சளி இருமல் மருந்துகள், சத்து மருந்துகள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
அனைந்திய சித்த மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் இலவச மருந்துகளை வழங்கினாஎ.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் தங்கமணி, டாக்டர் குமார், டாக்டர் முருகேசன், டாக்டர் அருள் முருகன், டாக்டர் சகுந்தலா சந்தானகிருஷ்ணன், டாக்டர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply