திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நிறுவன பிரதிநிதிகள் கண்டறிந்திட விருப்ப வெளிப்பாடுக்கான விண்ணப்பங்கள் ((EXPRESSION OF INTEREST)) வரவேற்கப்படுகிறது.
பொது மற்றும் தனியார் கூட்டமைப்புத் திட்டத்தின் கீழ்
திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நிறுவன பிரதிநிதிகள் கண்டறிந்திட விருப்ப வெளிப்பாடுக்கான விண்ணப்பங்கள் ((EXPRESSION OF INTEREST)) வரவேற்கப்படுகிறது.
———-
பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ் தொழிற்நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள 32 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்திடும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை மேம்படுத்திட மத்திய அரசால் ரூ.2.50 கோடி நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இத்துறையின் கீழ் இயங்கும் பின்வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள தொழிற்நிறுவன பிரதிநிதிகளுக்கு மாற்றாக புதிய நிறுவனங்கள் கண்டறிந்திட வேண்டி இத்திட்டத்தில் பங்கேற்றிட விழையும் தொழிற்நிறுவனங்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுக்கான விண்ணப்பங்கள்(Expression of Interest) வரவேற்கப்படுகின்றன.
மேலும், இதுகுறித்து கூடுதல் விபரங்களை (www.tenders.tn.gov.in).என்ற இணைய முகவரியிலும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருப்பூர் தொலைபேசி: 0421 – 2429201-லும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் பின்வரும் முகவரியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்கத்தில் நேரில் ஃ தபால் மூலம் 26.02.2021 மாலை 4.00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
மேல்விபரங்களுக்கு இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ,
ஆலந்தூர் ரோடு, கிண்டி ,சென்னை – 600032 (தொலைபேசி;: 044 – 22501083,
044 – 22500099, 044 -22500199) அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு.