கள்ளக்காதல் மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்படுகொலை
![]()
ஊத்துக்கோட்டை அருகே கள்ளக்காதலனை மாற்றியதால் ஆத்திரமடைந்த வாலிபர் மூன்று குழந்தைகளுக்கு தாயான இளம் பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை :
திருவள்ளூர் நவ 10 : திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை (24) என்ற இளம் பெண்ணை ஆந்திர மாநிலம்,காரணி காரூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.ராஜேஷ் சென்னை ஏர்போர்ட் பகுதிக்கு டிராவல்ஸ் சர்வீஸை செய்து வருகிறார்.
மணிமேகலை-ராஜேஷ் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,காரூர் பகுதியில் வசித்து வரும் துர்காபிரசாத் (28) என்பவருடன் மணிமேகலைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாம்.இந்நிலையில்,கடந்த ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை செங்கரை பகுதியில் குடியேறினார்.மேலும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு மணிமேகலை வேலைக்குச் சென்று வந்தார்.இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக துர்காபிரசாதிடம் மணிமேகலை சரிவர செல்போனில் பேசுவதில்லையாம்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் மதியம் துர்காபிரசாத் மணிமேகலை வேலை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சென்றாராம்.அங்கு பணியாற்றும் மேற்பார்வையாளருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்தாராம்.மேலும்,மேற் பார்வையாளரிடம் மணிமேகலை சிரித்து பேசி மகிழ்ச்சியுடன் இருந்தாராம்.இதனால் ஆத்திரத்தை மனதில் அடக்கி வைத்துக்கொண்டு மணிமேகலையிடம் அன்பாக பேசி உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்தாராம்.
இதனால் தனது மோட்டார் சைக்கிளில் துர்காபிரசாத் மணிமேகலையை ஊத்துக்கோட்டை அருகே பெண்ணாலூர்ப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்றான்பாளையம் காப்புகாடு பகுதிக்கு அழைத்துச் சென்றாராம்.அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தார்களாம்.இந்நிலையில் துர்காபிரசாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென மணிமேகலையின் முகத்தில் சரமாரியாக வெட்டினாராம்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மணிமேகலை மயங்கி கீழே விழுந்தாராம்.இதன் பின்னர்,மணிமேகலையை கழுத்தை அறுத்து கொலை செய்தாராம்.சிறிது நேரத்தில் துடிதுடித்து மணிமேகலை சம்பவ இடத்திலேயே இறந்து போனாராம்.இதன் பின்னர்,துர்கா பிரசாத் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றாராம்.
இந்நிலையில், அவ்வழியே சென்ற பொதுமக்கள் காப்புக்காடு பகுதியில் இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் சம்பவம் குறித்து பெண்ணாலூர்ப்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் போலீசாருக்கு மேற்கண்ட தகவல்கள் கிடைத்ததாம்.இந்த கொலை சம்பவத்தில் துப்புத் துலக்கியதில் தலைமறைவாக இருந்த துர்காபிரசாத்தை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.இந்தக் கொலை சம்பவம் தமிழக-ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

