மீனவர் நலவாரியத்திலிருந்து ரூ. 2 லட்சம் நிதியுதவி
![]()
சாட்டாங்குப்பம் மீனவ பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு மீனவர் நலவாரியத்திலிருந்து ரூ. 2 லட்சத்திற்கான நிதியுதவி : மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தகவல் :
திருவள்ளூர் நவ 10 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் குறுவட்டம், பழவேற்காடு கிராமம், சாட்டாங்குப்பம் மீனவ பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, த/பெ. சின்னகன்னு வயது -42 என்பவர் தனது இல்லத்தில் நேற்று டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இறந்த மீனவருக்கு மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளார்.
உயிரிழந்த மீனவருக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் வாயிலாக ரூ.2,00,000 விபத்து நிவாரணம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.

