இன்றைய ராசிபலன் – 10-08-2026

Loading

மேஷம்:

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர் கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தைவழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச் சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனை அவசியம். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,

மிதுனம்:

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகம்:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்குவதுடன் அவருடைய ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக் கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி:

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர் களாலும் நண்பர்களாலும் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலாம்:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். பயணம் தவிர்க்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்கு திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பது தாமதமாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகளுடன் பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிற்பகலுக்குமேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மீனம்:

இன்று எதிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையால் அசதி ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.

 

0Shares