கோவை ஆதித்யா கல்லூரி பட்டமளிப்பு விழா

Loading

ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா*
கோவை குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது..
ஆதித்யா கல்வி குழுமங்களின் தலைவர் பொறியாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக சி.ஐ.இ.எல்.நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரி நெல்சன் குழந்தைராஜ் கலந்து கொண்டு பொறியியல் பட்டம் முடித்த மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்..
முன்னதாக விழாவில் பேசிய அவர்,மாணவர்கள் தங்கள் பெறும் கல்வி அறிவோடு நல்ல பண்புகள் மற்றும் குணங்களை வளர்த்தி கொள்ள வேண்டும் எனவும், மேலும் கல்வி அறிவை சமூகத்திற்கு நல்ல பயனுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தற்போதைய சவாலான தொழில் நுட்ப உலகில் செய்முறை அனுபவம் மாணவர்களுக்கு தொழில்துறைத் திறன்களையும் நடைமுறை அறிவையும் அதிகரிக்க உதவும் என கூறினார்.
அதோடு ஆதித்யா கல்லூரியில் வழங்கப்படும் பல்வேறு தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்…
விழாவில் பொறியியல்,சிவில்,மின்னனு,உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயின்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன..
விழாவில், ஆதித்யா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர்கள் பிரவீண் குமார்,ஸ்ரீநிதி பிரவீண் குமார்,இயக்குனர் ஜோசப் வி தனிக்கல்,முதல்வர் டாக்டர் திருமலை,டீன் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீதேவி, அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் தீபா ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர் .மற்றும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,ஊழியர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

0Shares