திமுக,விசிக நிர்வாகிமீது எஸ்பியிடம் புகார் 

Loading

கட்டை, கல், இரும்பு ராடுகத்திபோன்ற பயங்கர ஆயுதங்களால்தாக்கிய திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் விசிக நிர்வாகிமீது

எஸ்பியிடம் புகார் 

திருவள்ளூர் ஏப் 28 : திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு  கார்த்திக், சபரிநாதன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 23-ஆம் தேதியன்று  2-வது மகன் சபரிநாதன் இந்த கிராமத்தின் அருகே உள்ள குப்பம்மாள்சத்திரம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது கைவண்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சௌக்கர் பாண்டியன் மற்றும் விசிக கட்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் சபரிநாதனை பிடித்து, மாம்பழம் சின்னத்தை சேர்ந்த உனக்கு என்னடா இங்கு வேலை, வெளியே போடா .. இல்லையென்றால் உன் கை காலை உடைத்துவிடுவேன் என்று மிரட்டி அடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பொது மக்கள் அவர்களை மடக்கி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து சபரிநாதன் இரவு வீட்டில் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சௌக்கர் பாண்டியன் மற்றும் நாகராஜ் ஆகியோர் பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தகளால் திட்டி செல்வியை வெளியே வர சொன்னதால் அவர் வெளியே வந்து பார்த்த போது 20-க்கும் மேற்பட்டோர் குடிபோதையில் கையில் கட்டை, கல், இரும்பு ராடு, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்துக் கொண்டு நின்றிருந்ததால், அவர்களிடம் சென்று என்ன நடந்தது என்று தாய் செல்வி கேட்டுள்ளார்.
 அப்போது சௌக்கர் பாண்டியன் மற்றும் நாகராஜ் ஆகியோர் செல்வியை தள்ளிவிட்டு  மகன் சபரிநாதனை அடித்து தாக்கியுள்ளனர். அவர்களை மடக்க முயன்ற போது மூத்த மகன் மற்றும் கணவர் மற்றும் மருமகள் ஆகியோரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா சப் இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் என்பவர் பாதிக்கப்பட்ட மகன் சபரிநாதன் சொன்னதை புகாராக எழுதாமல் சௌக்கர் பாண்டியனுக்கு ஆதரவாக மிரட்டும் தொணியில் கையெழுத்து பெற்று சென்றுள்ளார்.
எனவே தாலுக்கா போலீசார் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும்,  மகனை தாக்கிய திமுகவைச் சேர்ந்த கைவண்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சௌக்கர் பாண்டியன் மற்றும் விசிகவைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் மீது திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் செல்வி மற்றும் அவரது மகன்கள் புகார் கொடுத்துள்ளனர். எஸ்பியும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஐ.ஜி.யை சந்தித்து புகார் அளிகக்ப் போவதாகவும் தெரிவித்தனர். மகனை தாக்கிய நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி்ககை விடுத்துள்ளனர்.
0Shares