தெருநாய்கள் கடித்து பெண்கள்,சிறுவர்கள்15பேர்காயம்
![]()
திருவள்ளூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்- மருத்துவமனையில் சிகிச்சை :
திருவள்ளூர் ஏப் 28 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கல்லம்பேடு, பூவனூர் கிராமத்தில் சாலையில் நடந்து சென்றவர்களையும், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் என 15-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு பசுமாட்டையும், அந்த நாய் கடித்து குதறியுள்ளது.
இதனை அடுத்து காயமடைந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்தில் அதிகமாக தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொது மக்களை கடிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

