வழிபாடு என்பது உரிமை. ஆக்கிரமிப்பு என்பது குற்றம்

Loading

 

அரசு நிலத்தில் மதத்தின் பெயரால் ஆக்கிரமிப்பா? சட்டத்தின் முன் எதுவும் செல்லாது! — டாக்டர் ஆ.ஹென்றி விழிப்புணர்வு பதிவு.

தமிழ்நாட்டில் அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து, எந்த மதத்தின் பெயரிலாக இருந்தாலும் கட்டப்படும் கட்டிடங்கள் சட்டபூர்வமானவை அல்ல — இதைத் தெளிவாகவும் திடமாகவும் உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கி உள்ள தீர்ப்பினை குறித்தும்‌ மற்றும் மேற்கண்ட வகையில் உள்ள நிலங்களை பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் வாங்கி ஏமாற வேண்டமென எச்சரித்தும் டாக்டர் ஆ.ஹென்றி விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில்..

வழிபாடு என்பது உரிமை. ஆனால் ஆக்கிரமிப்பு என்பது குற்றம்.1991 ஆம் ஆண்டில் இருந்த மத வழிபாட்டுத் தலங்களின் நிலையை பாதுகாக்கும் சட்டம் இருந்தாலும், அது அரசு நில ஆக்கிரமிப்புக்கு பாதுகாப்பு அல்ல என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.சட்டத்தின் அடிப்படை — சமத்துவம் (Article 14), மதச்சார்பு சுதந்திரம் (Articles 25 & 26), சொத்து உரிமை (Article 300-A) — அனைத்தும் “சட்டத்தின் கீழ் மட்டுமே” இயங்கும்; சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை.. அதை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்துவது மட்டுமல்ல, மத அடையாளம் கொடுத்தாலும் கூட சட்ட விரோதமே என உறுதிபட தெரிவித்துள்ளது.

மேலும் இத்தீர்ப்பு சம்பந்தமாக நீதிமன்றம் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள், அரசு நிலம், நீர்நிலைகள், கால்வாய்கள் மீது எந்த வகையிலான ஆக்கிரமிப்பும் அனுமதிக்கப்படாது. பொதுப் பாதையை மறித்து கட்டப்படும் வழிபாட்டு தலங்கள் குற்றச் செயலாகும். மத நம்பிக்கை சட்டத்திற்கு உட்பட்டது — சட்டத்திற்கு மேலானது அல்ல. சட்டவிரோத கட்டிடங்களுக்கு மத அடையாளம் கொடுத்தாலும் சட்டபூர்வமாகாது எனவும், அதுபோல் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு (Local Bodies) ஆக்கிரமிப்பை அகற்ற முழு அதிகாரம் உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்கள் பொறம்போக்கு / அரசு நிலங்களின் வகைகள் முக்கியமாக குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம்‌ என்பதையும் மற்றும்‌ நிலங்களின் வகைகளை கீழ்கண்டவாறு தெளிவாக‌ விவரித்துள்ளார்.  அவைகள் முறையை நீர்நிலைகள் — ஏரி, குளம், கான்மாய், ஓடை, கால்வாய்,  பொதுப் பாதைகள் — சாலை, தெரு, நடைபாதை, மேய்ச்சல் நிலங்கள் (Grazing Lands), கல்லறை / சுடுகாடு நிலங்கள்,  பள்ளி, மருத்துவம் போன்ற பொது பயன்பாட்டு நிலங்கள்,  அரசு ஒதுக்கீட்டு நிலங்கள் (Reserved Lands), நதிக்கரை, கடற்கரை பாதுகாப்பு பகுதிகள்,  மலை மற்றும் காடு சார்ந்த பாதுகாப்பு நிலங்கள், மற்றும் பஞ்சாயத்து / மாநகராட்சி பொதுநிலங்கள் “பொறம்போக்கு” என வருவாய் பதிவுகளில் குறிப்பிடப்படும் அனைத்து நிலங்களின் வகைகளாகும்.

தமிழகத்தில் நில மாபியாக்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின்  துணைக் கொண்டு  இவ்வகை நிலங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பின்னர் துண்டுகளாக விற்பனை செய்யும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. பட்டா கிடைக்கும்”, “ரெகுலரைஸ் ஆகும்” போன்ற பொய்யான உறுதிமொழிகளை பொதுமக்களிடம் வழங்கி நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் பொய்யான உறுதிமொழிகளை நம்பி பொதுமக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதுபோல் பொதுமக்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  அரசு நிலம் ஒரு நாளும் வாங்க முடியாது என்பதுடன் ஆக்கிரமிப்பு நிலம் எந்நாளும் பாதுகாப்பாகாது என்பதனையும், சட்டத்திற்கு புறம்பான முதலீடு — நிச்சயம் இழப்பு என்பதனையும், கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்தும் கடும் அறிவிப்பாகும் என தெரிவித்துள்ளார்.

ஆகவே பொதுமக்கள் நிலம் வாங்கும் முன் அதன் சட்டப்பூர்வ நிலையை உறுதி விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் தான் உங்கள் முதலீடு பாதுகாப்பாகும். சட்டம் உயர்ந்தது — அதற்கு மேலே யாரும் இல்லை என்பதனை நினைவில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என அரசு பொறம்போக்கு நிலங்களை குறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தனது விழிப்புணர்வு பதிவில் தெரிவித்துள்ளார்.

.

0Shares