திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில்விழிப்புணர்வு

Loading

திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு :
திருவள்ளூர் ஏப் 19 : சென்னை பெருநகர மாநகராட்சி, திருவொற்றியூர் வட்டம் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் 10-க்கும் மேற்பட்ட வெளிப்புற நீர் விளையாட்டு துடுப்பு பலகையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி வைத்து, 3 விசைப்படகு மற்றும்  மீனவ நாட்டு படகுகளில் கடலுக்குள் சென்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வெளிப்புற நீர் விளையாட்டு துடுப்பு பலகையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி வைத்து, 3 விசைப்படகு மற்றும் மீனவ நாட்டு படகுகளில் கடலுக்குள் சென்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு சால்வைகளை அணிவித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் 200-க்கும் மேற்பட்ட மீன சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சு.தணிகாசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை (மத்தியம்)) யுவராஜ், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) அஜய் ஆனந்த், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவொற்றியூர் உதவி ஆணையர் (ம) மண்டல அலுவலருமான பத்மநாபன், உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், 200-க்கும் மேற்பட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares