திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி வாக்களிக்க நடவடிக்கை
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டமன்றபொது தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஏப் 14 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 23ம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் சக்ஷ்ம் செயலி மூலம் மாற்றுத்திறனாளிக்கு உதவிகள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் பொழுது தேவைப்படும் சக்கர நாற்காலி, வாக்கு சாவடிக்கு வருவதற்கும் மற்றும் மீண்டும் வாக்களித்த பின் வீட்டிற்கு போய் சேர்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவியாளர் தேவை குறித்த அனைத்து விவரங்களும் சக்ஷ்ம் (SAKSHAM) ஆப்பில் பதிவு செய்தால் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்கு பதிவு செய்ய வரிசையில் நிற்க தேவையில்லை மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை தேர்தல் நடத் தும் அலுவலரிடம் காட்டி விரைவாக வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது இதை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும்.
தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு பதிவு உறுதி செய்ய அனைத்து வசதிகளும் செய்துள்ளது 21- வகையான மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்கு பதிவு செய்யலாம் அதற்கான அணுகல் வசதி மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு செய்ய தடைகள் ஏற்பட்டால் நமது சைகை மொழியில் உதவுவதற்கு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் வீடியோ காலில் (WHATSAPP NUMBER – 7305158550) கட்டுப்பாட்டு அறையில் உள்ளார்கள் எனவே உங்களின் பிரச்சனை விரைவாக சீர் செய்து வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதர தேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்; 18042508515 மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
80 வயது மேற்பட்டவர்கள் கடுமையான பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாக்குசாவடி வர தேவையில்லை அவர்களின் வீட்டிற்கே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சென்று வாக்கு பதிவை உறுதி செய்து பெற்றுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் தன்னார்வலர்களுடன் சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளது என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியயருமான பிரதாப் தெரிவித்துள்ளார்.

