இன்றைய ராசிபலன் – 15-04-2026

Loading

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் வாக்குவாதம் செய்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ரிஷபம்:

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினகள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங் குவது நல்லது. வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ப சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்:

பரபரப்பான நாளாக அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் சற்று எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் விவாதம் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி களைத் தொடங்குவது சாதகமாக முடியும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவ லகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது..

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கன்னி:

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்ப தற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்:

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர் களால் ஆதாயம் உண்டாகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிகம்:

தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்று வீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் யோசனைக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால், திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். வீண் அலைச் சலைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்களுக்கு உதவி செய் வீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

இன்று புதிய முயற்சி சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். விற்பனையும் நன்றாக இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

 

0Shares