மதுபோதையில் அட்ரஸ்கேட்டதில் தகராறு

Loading

திருவள்ளூரில் கூகுள் மேப்பை நம்பி வழி  தவறி வந்து மதுபோதையில் அட்ரஸ் கேட்டதில் ஏற்பட்ட தகராறு : செங்கல் வீசி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது :

திருவள்ளூர் பிப் 02 : திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் வந்த போது உதயகுமாரிடம் வழி கேட்ட போது ஏற்பட்ட சண்டையின் போது செங்கல் வீசி தாக்கி கொண்டனர். தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் திருநின்றவூரில் இருந்து  நண்பர்களுடன் வந்த சந்துரு, ராஜேஷ்  ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சங்கர் வீட்டுக்கு சென்ற போது வழி கேட்ட போது ஏற்பட்ட  தகராறில் திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே கல்வீச்சு நடந்ததால் மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு  திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0Shares