படிவங்களைபூர்த்திசெய்துதிரும்பபெறுவதுதொடர்பாக
![]()
மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய தொகுதியில் விநியோகிக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறுவது தொடர்பாக கலந்தாலோசனை கூட்டம் :
திருவள்ளூர் டிச 01 : சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் திருள்ளூர் மாவட்டம் ஆகிய பகுதிகளின் மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட மண்டல மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய மேற்பார்யாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அவர் கூறியதாவது :
தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் 2025 தொடங்கி நடைபெற்று வருகிறது டிசம்பர் 4 வரை படிவங்களை வீடு வீடாக சென்று அங்கு இருக்கிற வாக்காளர் நிலை அலுவலர்களும், வாக்காளர் நிலையை மேற்பார்வையாளர்களும் சென்று கொடுத்து அவர்களிடம் இருந்து படிவங்களை திரும்ப பெற்று, கணினி மயமாக்கல் செய்து வருகின்றனர், வரைவு வாக்களார் பட்டியலை டிசம்பர் 9 தேதி மாவட்டத்தில் இருக்கிற 10 தொகுதிகளுக்கும் வெளியிடப்படவுள்ளது. அதன்படி, இன்று அம்பத்தூர் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களுடைய கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை அவர்களிடம் கேட்டறிந்து அரசியல் கட்சிகள என்னென்ன விஷயங்கள் எதிர் பார்கிறோம் தகவல்களையும் கருத்துகளையும் தெரிவித்தனர்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுத்தவரையில் மொத்த வாக்களார்கள் 3,74,000, வாக்காளர்களில் 1,69,000 விநியோகம் செய்யப்பட்டு சராசரியாக இதுவரை 45.32 சதவீதம் முடிவடைந்துள்ளது. 4 அல்லது 5 நாட்களில் மற்ற நிலுவைலுள்ள படிவங்களை முடிவடைய செய்ய வேண்டும். அந்த படிவங்களில் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறது என்றால் அங்கு இருக்கின்ற தன்னார்வலர்கள் வாயிலாக பூர்த்தி பண்றதுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் எடுத்திருக்கிறோம்.
அம்பத்தூர் வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலர் அம்பத்தூர் மண்டலம் மற்றும் அவங்களுக்கு கீழ இருக்குற அனைத்து அலுவலர்களும் அப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் படிவங்களில் ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்கள் நேரடியாக அதிகாரிகளை சந்திக்கலாம்.இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளை 54 சதவீதம் முடித்திருக்கிறோம். மொத்தம் 36 லட்சம் வாக்காளர்கள் அதில் ஏறக்குறைய 20 லட்சம் வாக்காளர்களின் படிவங்களை திரும்பி பெற்றிருக்கும் மற்ற பணிகளும் தொடர்ந்த நடைபெறுகிறது.திருத்தணியில் 70% முடிந்து இருக்கிறது மதுரவாயில் 41 சதவீதம் முடிந்திருக்கிறது இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிந்துவிடும். என மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,மாநகராட்சி பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன்,வாக்காளர் பதிவு அலுவலரும் துணை ஆணையருமான மாரிச்செல்வி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஜெ.இந்திராணி (ஆவடி மாநகராட்சி வருவாய் அலுவலர்), இ.ஜீவிதா (திருநின்றவூர் நகராட்சி ஆணையர்), வி.ராமர் (திருவேற்காடு நகராட்சி ஆணையர்), வட்டாட்சியர் டி.கண்ணன்(ஆவடி) வாக்காளர் பதிவு அலுவலர்/ உதவி ஆணையர் (ம) மண்டல அலுவலர் அர்.எ.பிரபாகர், உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் அம்பத்தூர் வட்டாட்சியருமான பி.விக்ரம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / உதவி வருவாய் அலுவலர்கள் கிருபாகரன் லட்சுமண குமார், வாக்காளர் பதிவு அலுவலரும் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியருமான எம்.சதீஷ் குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் மதுரவாயல் வட்டாட்சியருமான ஜி.ஜெயக்குமார் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

