உதகை அரசுகாதுகேளாதோர்பள்ளியில் ஓவியப்போட்டி

Loading

 

நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகை அரசு காதுகேளாதோர் பள்ளியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள்நேரில் பார்வையிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03 ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், இன்று உதகை அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெற்ற ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். இன்று நடைபெற்ற இப்போட்டியில், செவிதிறன், இயக்கத்திறன், அறிவுசார், புறவுலக சிந்தனையற்றோர், பார்வை திறன் குறையுடையோர் என 4 வகை மாற்றுத்திறன் பிரிவுகளின் அடிப்படையில் 10 வயது, 11-18 வயது, 18 வயதிற்கு மேல் தங்கள் விருப்பப்படி எந்த பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓவியம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் ரோயால்ஸ், சாந்தி ரோட்டரி, டிசெல்வா, காது கேளாதோர் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 41 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு ஓவியங்களை வரைந்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குப்புராஜ் உட்பட பலர் உள்ளனர்.

 

0Shares