கொட்டும்மழையில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா

Loading

திருவள்ளூர் நேதாஜி சாலையில் ரூ.8 கோடியில் மேடாகவும் தாழ்வாகவும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக மழைநீர் கால்வாய் அமைப்பதாக கிடைத்த புகாரையடுத்து கொட்டும் மழையில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நேரில் ஆய்வு :
திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் நகராட்சி நேதாஜி சாலை முதல் கோயில் குளம் வரை 1,200 மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 8கோடியில்  மழைநீர் கால்வாய் பணிகள் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இங்கு அமைக்கப்படும் மழைநீர் கால்வாயை  ஒரு சில பகுதியில் மேடாகவும், வளைவாகவும், மற்ற இடங்களில் தாழ்வாகவும் போடப்பட்டிருப்பதாகவும் இதனால் வீட்டிற்குள் மழைநீர் புகுந்துவிடுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும்  பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கொட்டும் மழையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பெரும்பாலான இடங்களில் மேடாகவும்,  ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கால்வாய் அமைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்குறித்தும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மழை நீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதாகவும்,  வீட்டை விட ஒரு அடிக்கு மேல் இந்த கால்வாய் அமைத்திருப்பதால் சிரமமாக இருப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக கால்வாய்கள் அமைக்காதது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
 மேலும் மழை காலங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் இதனால் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நேதாஜி சாலையில் மேடாகவும் தாழ்வாகவும் பொது மக்களுக்கு இடைஞ்சலாக மழைநீர் கால்வாய் அமைப்பது குறித்து ஆட்சியரிடமும் முன்னாள் அமைச்சர் புகார் மனு அளித்துள்ளார். இந்தஆய்வின் போது மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் பி.வி.பாலாஜி, நகர செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் எஸ்.ஏ.நேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
0Shares