குறைதீர்க்கும் நாள் கூட்டம்..மாவட்டஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், விவசாயிகளுக்கு அழைப்பு!

Loading

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2025 அன்று மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற
25.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள்
அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள்
சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களாக
வழங்கலாம்.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே,
விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு
பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.

 

0Shares