ஈரோடு ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேரில் ஆய்வு

Loading

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர் / துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர்
திரு.தி.ந.வெங்கடேஷ் இ.ஆ.ப.
, அவர்கள் மற்றும்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர்/துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.தி.ந.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் (04.11.2025) அன்றுநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர்/துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர்
அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் ஈரோடு மாநகராட்சி, கோட்டை, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்து 2 பயனாளிகளுக்கு பிறப்பிடச் சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து, ஈரோடு, சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதையும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர்/துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர்
அவர்கள், மொடக்குறிச்சி பேரூராட்சியில், ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கசடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதம் உள்ள பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆலத்துப்பாளையம் பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணியினையும் பார்வையிட்டு சாலையின் தரம், நீளம், அகலம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், துய்யம் பூந்துறை பகுதியில், தோட்டக்கலை மற்றம் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாடு திட்டத்தின் கீழ், 2,000 சதர மீட்டர் பரப்பளவில் ரூ.8.90 இலட்சம் மானியத்தில் பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளியுடன் கலந்துரையானடிார்.

தொடர்ந்து, மொடக்குறிச்சி பேரூராட்சி, தூரபாளையம் பகுதியில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு, மொடக்குறிச்சி பகுதியில் 70 வயதிற்கு மேற்பட்டோர்களான மொத்தமுள்ள 126 குடும்ப அட்டைதாரர்களில் நேற்றைய தினம் 56 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்றைய தினம் மீதமுள்ள 70 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், அவல் பூந்துறை பகுதியில், ஈரோடு – தாராபுரம் மாநில நெடுஞ்சாலை 14/4 – 15/8 வரை ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் முடிவுறும் நிலையில் உள்ள ஓடுதளம் மேம்பாடு செய்யும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர்/துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.தி.ந.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர்/துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர்
அவர்கள், ஈரோடு மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தற்போது வரை நடத்தப்பட்ட சிறப்பு திட்ட முகாம்கள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், சோலார் பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம், அம்ரூத் 2.0, திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவை தொடர்பாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம், கலைஞரின் கனவு இல்லம் ஆகிய திட்டங்கள் தொடர்பாகவும், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை, மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் குறித்தும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இ-பட்டாக்கள் மற்றும் துறையின் சார்பாக வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் தொடர்பாகவும், பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வுகளின் போது, மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் திரு.சிவானந்தம் இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.பிரியா, துணை ஆணையர் திருமதி.தனலட்சுமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிந்துஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு.கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திரு.முகம்மது குதுரத்துல்லா (பொது), திரு.செல்வராஜ் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வெங்கடேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் திரு.சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

0Shares