முனுஆதி நூற்றாண்டு விழாவில் புகழாரம்
![]()
அனைவரையும் அரவணைத்து பக்குவப்பட்ட அரசியல் ஆளுமையராக திகழ்ந்திருந்தவர் முனுஆதி நூற்றாண்டு விழாவில் புகழாரம்
சென்னை : சித்தாந்த பிடிப்பை விட முக்கியமானது அடித்தட்டு மக்களுக் கான செயல்பாடு என்பதற்கு முன்னு தாரணமாக வாழ்ந்து சிறந்திருந்வர்
முனுஆதி; அதிகார தோரணையில் லாமல் அனைவரோடும் பழகி, அரவ ணைத்து, ஒரு பக்குவப்பட்ட அரசியல் வாதியாக திகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது என தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் அமரர் முனுஆதி ஆண்டு விழாவில் தலைவர்கள் கருத்துரைத்து புகழாரம் சூட்டினார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மே னாள் சபாநாயகர் ஆகவும், தாம்பரம் பகுதியில் குறிப்பிடத்தக்க தலைவ ராக இருந்து மறைந்த முனுஆதி அவ ர்களின் நூற்றாண்டு விழா மற்றும் ஆணவக் கொலைகள் தடுப்பு காவல் சட்டம் இயற்ற ஆணையம் அமைத்து ள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள ராஜகோபால் திருமண மண்டபத்தில் அக்டோபர் 27 ஞாயிறு அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி தலைமையேற்று சிற ப்புரை ஆற்றினார் . திராவிடர் கழகத் தின் தாம்பரம் பகுதி தலைவர் ப. முத் தையன் அனைவரையும் வரவேற்றிட, திமுக அமைப்பு செயலாளரும், நாடா ளுமன்ற முன்னாள் உறுப்பினருமா கிய ஆர். எஸ். பாரதி , திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா, முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் மீ.அ. வைத்தியலிங்கம், தாம்பரம் மாநக ராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந் திரன், மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் மாநகர மன்ற உறுப்பினர் எம். 8″யாக்கூப் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் நூற்றாண்டு நினைவு ரைகள் வழங்கி சிறப்பித்தனர்.
அவர்கள் பேசியதாவது :
தாம்பரம் பஞ்சாயத்திலும், தாம்பரம் நகர மன்றத்திலும் உறுப்பினராக இருந்து, அடுத்தடுத்து நகர மன்ற தலைவராகவும், சைதாப்பேட்டை, திருப்போரூர், தாம்பரம் உள்ளிட்ட தொகுதிகளில் நான்கு முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும், எம். ஜி. ஆர் ஆட்சி காலத்தில் 1977 முதல் 1980 வரை, தமிழ்நாடு சட்டமன்றத்தின் தலைவராகவும் சிறப்புடன் செயல் பட்டவர் முனுஆதி.
எம்.ஜி.ஆரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிட பெரும் முயற்சி எடுத்து, அண்ணாவிடம் உறுதிமொழி பெற்று, அவரை பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெறச் செய்திட தேர்தலில் அயராது பணியாற்றியவர் முனுஆதி.காங்கிரஸ் கட்சியிலிருந்து சோசலி ஸ்டாகி, சிறையில் ஏற்பட்ட அண்ணா வின் தொடர்பால் திமுகவில் அர்ப் பணிப்புடன் செயல்பட்ட முனுஆதி, 1940 களிலேயே தாம்பரம் பகுதியில் முதன்முதலாக பெரியார் பெயரில் நகர் ஒன்றை அமைத்து அண்ணாவை வைத்து திறப்பு விழா நடத்தியவர்.
கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த ஜீவா மீது பற்றும் பாசம் கொண்டு, அவர் மறைவுக்குப் பின், அவர் வாழ் ந்திருந்த தாம்பரம் பகுதியில் ஜீவா வுக்கு முழுஉருவச் சிலை அமைத்து தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்திட்டவர்.
தாம்பரம் பகுதிக்கு பாலாற்று நீர், சுகாதார வசதிகள், பள்ளி கல்லூரி களை அமைத்திடவும் அரும்பாடு பட்டவர் ; இன்று தாம்பரம் அனைத்து வசதிகளையும் பெற்று, மாநகரமாக சென்னையின் நுழைவு வாயிலாக சிறப்பு பெற்றிருக்கிறது என்றால், அதற்கு காரணமாக இருந்தவர் முனு ஆதிதான்.
அதிகார தோரணையில்லாமல் அனைவரோடும் பழகி, அரவணைத்து, ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாக திகழ்ந்திருந்தவர் முனுஆதி அவர்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், மகாத் மா காந்தி தாம்பரம் பகுதிக்கு வந்திரு ந்த போது, நிதி திரட்டி அளித்துள்ளார். சோசியலிஸ்ட் கட்சியிலிருந்து செயல் பட்ட போது தோழர் ஜீவாவுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார். இவ்வாறான நாகரிக அரசியல் அரிச்சுவடியை உரு வாக்கிய அரும்பெரும் தலைவராக வும் உயர்ந்திருந்தார்.
சித்தாந்த பிடிப்பைவிட முக்கியமமா னது அடிதட்டு மக்களுக்கான செயல் பாடே என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து சிறந்தவர் முனுஆதி; அவரு டைய புகழ் நூற்றாண்டை கடந்தும் நிலைத்திருக்கும்.
“நம்மையெல்லாம் ஆளாக்கிய பெரி யாருக்கு என்ன செய்யப் போகிறோம்” என சட்டமன்ற உறுப்பினராக இருந்த முனுஆதி, முதலமைச்சராக இருந்த அண்ணாவிடம் கேள்வியை கேட்டிட ,அதற்கு பேரறிஞர் அண்ணா அவர் கள் “இந்த ஆட்சியே பெரியாருக்கு காணிக்கைதான்” என்று வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தைச் சொன்ன பெருமைக்கு காரணமாக இருந்தவர் மானமிகு முனுஆதி அவர்கள்தான்.
சென்னை பொது மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுக் கொண்டிரு ந்த பெரியாரிடம் இந்த செய்தியை ஆவலோடு சொல்லியபோது, மிக்க மகிழ்ச்சி என சொல்லியவாறு பெரி யார் தனது வலி குறைந்தது என எழுந்து உட்கார்ந்தார். அத்தகைய வரலாற்று நாயகருக்கு திராவிடர் கழகம் சார்பில் இந்த நூற்றாண்டு விழாவை முன்னெடுத்துக் கொண் டாடி சிறப்பு செய்திட வேண்டிய கடப்பாடு இருப்பதால், இந்த விழாவை ஏற்பாடு செய்து இதில் கலந்துகொண் டிருக்கிறோம் என பங் கேற்ற அனைவரும் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள்.
விழா முடிவில் முனுஆதியின் மகனும், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பி னருமான ஆதிமாறன் நன்றி தெரிவி த்து பேசினார். ஜீவாவின் மகன் ஜீவா. மணிக்குமார் , மூத்த தோழர் மக்கள் தாசன், டி.எம்.ஜி.மார்க்ஸ் ஆனந்த் மற் றும் அனைத்து கட்சியினரும் பத்தி ரிகை ஊடகவியலாளர்களும், பிறரும் என பலரும் கலந்து கொண்டு நிகழ் ச்சியை சிறப்பித்தனர்.

