போர் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்..உண்மையை போட்டுடைத்த பாகிஸ்தான் பிரதமர்!
“டிரம்ப் தலையிடாவிட்டால் போர் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்” என்று பாகிஸ்தான் பிரதமர் பேசியிருப்பது உண்மையை ஒப்புக்கொண்டது போல பேசுபொருள் ஆகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.இந்தநிலையில் டிரம்பின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80-வது அமர்வின் பொது விவாதத்தில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசினார்.அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி குறிப்பிட்டு பேசுகையில், “போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் டிரம்ப் மற்றும், அவரது குழுவினர் காட்டிய தீவிர பங்களிப்பிற்கு எங்களின் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனாதிபதி டிரம்பின் அற்புதமான மற்றும் அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து. இது நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச நன்றிக்கடன். டிரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால், ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்.” என்று ஷபாஸ் ஷெரீப் கூறினார்.