கோவில் இடத்துக்கு சொந்தம் கொண்டாடியதா காங்கிரஸ்? பெரியகுளத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
பெரியகுளத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறியதால் கூறுவதால் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ,பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவில் அமைத்துள்ளது அருள்மிகு பட்டாளம்மன் சாமி கோவில் , இக்கோவிலுக்கு சொந்தமான இடம் அப்பகுதியில் உள்ளது , அந்த இடத்தின் வரும் வருமானத்தை வைத்து பட்டாளம்மன் கோவில் தெரு பொதுமக்கள் அருள்மிகு பட்டாளம்மன் கோவிலுக்கு செலவு செய்து வந்தனர்.
இந்நிலையில் அந்த இடத்தில் தேர்தல் நேரங்களில் காங்கிரஸ் கட்சியினர் தற்காலிக அலுவலகம் அமைத்திருந்ததாகவும்,தற்போது அந்த இடம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது என காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் இன்று காலை அந்த இடத்தை பார்வையிட்டனர் ,
இதனால் மக்கள் குழப்பமடைந்து அதிர்ச்சியுற்றனர்.இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துப் பாதுகாப்பு குழு தலைவர் தங்கபாலு இன்று பெரியகுளத்துக்கு வருகை தந்து அந்த இடத்தை பார்வையிடுவதாக அப்பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் இடத்தை பார்வையிட்டபோது அதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இது கோவிலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறியதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.