சுடுகாட்டில் இளம் பெண்ணுடம் உல்லாசம்…கையும் களவுமாக சிக்கிய பிரபல கட்சி நிர்வாகி !
பாஜக நிர்வாகி மயானத்தில் உல்லாசமாக இருந்த போது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்சாகர் மாவட்டத்தின் கைலாவன் கிராமத்தில், பாஜக பட்டியலின் மாவட்ட செயலாளராக இருந்த ராகுல் வால்மீகி, திருமணமான பெண் ஒருவருடன் காரில் மயானத்திலேயே உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் வரமாட்டார்கள்” என்று நினைத்து சுடுகாட்டை தேர்ந்தெடுத்த இருவர், காருக்குள் அரை நிர்வாண நிலையில் இருந்தபோது, கிராம மக்கள் மடக்கி பிடித்து வீடியோ எடுத்தனர்.அக்காரணமாக, பெண் முகத்தை துப்பட்டாவால் மறைத்துக்கொண்டார்; ராகுல் வால்மீகி மன்னிப்பு கேட்டும் பொதுமக்கள் விடவில்லை. அந்த நிமிடங்கள் அனைத்தும் காணொளியாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
வீடியோ வைரலானதும், பாஜக தலைமையகம் ராகுல் வால்மீகியை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்றும், புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் பாஜக நிர்வாகி மனோகர்லால் தாக்கர் மீது, டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கட்சி மதிப்பையும், பொது நம்பிக்கையையும் சிதைக்கும் சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை தேவை என விமர்சகர்கள் வலியுறுத்துகிறார்கள்.