கள்ளக்காதலனுடன் உல்லாசம்…கணவரை கண்டதும் அரை நிர்வாணமாக ஓட்டம் பிடித்த மனைவி!
கள்ளக்காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்காதல் வன்முறைகள் இந்தியா முழுவதிலுமே அதிகமாகி கொண்டிருப்பதால், அதுதொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ஓயோ அறைகள் இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த வாடகையில் ஓயோ ரூம்கள் இருப்பதால் பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்தும் ஓயோ ரூம்களை சிலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதாக தொடர் புகார் வந்த நிலையில், சமீபத்தில் விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக ஓயோவில் நீங்கள் பதிவு செய்த ஹோட்டல்களில் போலீசார் எந்த வித வாரண்ட்களும் இல்லாமல் வந்து சோதனை செய்ய முடியாது. அந்த நினைப்பில் அனைவரும் தவறான செயல்களை செய்கின்றனர்.
இந்தநிலையில் கள்ளக்காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஓயோ ஓட்டலில் திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதன்பிறகு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, அப்பெண்ணின் கணவர் 2 குழந்தைகளுடன் அங்கு வந்தநிலையில் இதனையறிந்த அந்த பெண் அறைகுறை ஆடையுடன் ஹோட்டல் மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.கள்ளக்காதல் வன்முறைகளால் குடும்பங்கள் சிதைகிறது.