தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்!

Loading

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது..

தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் முடி வடைகிறது. இந்தநிலையில் இந்த காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.அதன்படி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும். வேட்பு மனு பரிசீலனை ஜூன் 10-ந்தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூன் 12-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தல் ஜூன் 19-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணியளவில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது..

6 எம்.பி.க்களில்எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் உள்ளன.திமுக விடம் காங்கிரஸ் கட்சியும் ஒரு சீட்டை பெறும் முயற்சியில் உள்ளது.இதேபோன்று, அ.தி.மு.க.வில் தே.மு.தி.க.வுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என முன்பே கூறப்பட்டது என பிரேமலதா கூறியுள்ளார்.

0Shares