கோவையில் அழகு நிலையம் துவக்கவிழா
![]()
கோவை
கோவை சரவணம்பட்டி பகுதியில் பேஜ் 3 எனும் அழகு நிலையம் துவங்கபட்டுள்ளது
அழகியல் தொடர்பான துறையில் உயர்தர சேவையை வழங்கி வரும் பேஜ் 3 நிறுவனம் கோவையில் தனது மூன்றாவது கிளையை சரவணம்பட்டி பகுதியில் துவங்கி உள்ளது..
கோவை சரவணம்பட்டி பகுதியில், பேஜ்-3 எனும் சலூன்,திறக்க பட்டது. இதனை பேஜ் – 3 அழகு நிலையத்தின் உரிமையாளர் அமராவதி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதில், பேஜ் – 3 நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி சண்முக குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக
நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் குமரவேல் மற்றும் நிறுவனர் வீணா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தனர்.
மேலும் தமிழ்நாடு வனத்துறை அகாடமியின் கூடுதல் இயக்குநரும், வன பாதுகாப்பாளருமான வித்யா சந்திரன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள பேஜ் 3 அழகியல் ஸ்டுடியோ குறித்து விருந்தினர்கள் கூறுகையில்,
சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு உலகத் தரத்தில் அழகு மற்றும் மேக்கோவர் சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய கிளை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நவீன ஹேர் ஸ்டைலிங், ஸ்கின் கேர், பிரைடல் மேக்கப் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இங்கு வழங்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக விரைவான சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் அழகியல் தொடர்பான தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் இந்த மேக் ஓவர் ஸ்டுடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
நிகழ்ச்சியில் தொழில்துறை பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

