தளிர் கலா விருதுகள்..சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை!
கர்நாடிக் ரோட்டரி சங்கம் சார்பாக சென்னையில் நடைப்பெற்ற தளிர் கலா விருதுகள் வழங்கும் விழாவில் சுருதி மற்றும் தாள அறிவு , பாடும் திறன் கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
கர்நாடிக் ரோட்டரி சங்கம் சார்பாக தளிர் கலா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டு 6 வயது முதல் 12 வயது வரை ஒரு பிரியவாகவும்மற்றும் 12 வயது முதல் 18 வயது வரை ஒரு பிரிவாகவும் பிரிக்க பட்டு இசையில் சிறந்த விளங்கும் சிறுவர் சிறுமிகளை கண்டறியும் விதமாக இப்போட்டி நடைபெற்றது. இதில் வாய்ப்பாட்டு, தந்தி வாத்தியம், காற்று வாத்தியம் (புல்லாங்குழல்) என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் நடுவர்களாக வயலின் வித்வான் கலைமாமணி டாக்டர் உஷா ராஜகோபாலன், இசைக்கலைஞரும்,ஆசிரியருமான ஷியாமளா வெங்கடேஷ்வரன் ஆகிய இருவரும் நடுவர்களாக பொறுப்பேற்று சிறந்த போட்டியாளரை தேர்வு செய்தனர் .ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 5 சுருதிகள் பயிற்சி செய்து வர கொடுக்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து நடுவர்கள் வழங்க அதிலிருந்து வாய்பாட்டுப் பாடலை பாடவேண்டும். அதே போல் வாத்தியம் கொண்டு வாசிப்பவர்கள் சுருதியில் வாசிக்க வேண்டும். அதில் அவர்களின் சுருதி மற்றும் தாள அறிவு , பாடும் திறன் அல்லது வாசிக்கும் திறன் பார்த்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மதிப்பெண் அடிப்படையில் மூன்று அல்லது நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ. 2500/- சென்னை கர்நாடிக் ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
கர்நாடக இசையை கற்க வரும் மாணவர்களுக்கு தளிர் கலா விருதுகள் ஊக்கமளிக்கும் . மேலும் இவ்விருதுகள் இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டு வருகிறது.இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது.