ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்” மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்.!
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் மாவட்டத்தில் நடை பெறும் குற்றங்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் மூலம் பொது மக்கள் இடையில் மிகுந்த வரவேற் பை பெற்று வருகிறார்.
அதன் தொடச்சியாக நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சைமன் நகர் பகுதியில் முதல் நிலை காவலர்கள் சசி மற்றும் சோபா ஆகியோரும் பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அசோகன் மற்றும் கீதா ஆகியோரை உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் அந்த பகுதி பொது மக்களிடம் அறிமுகப்படுத்தி நியமிக்கப்பட்ட காவலரின் பணிகள், பொது மக்கள் மற்றும் காவலர்கள் இடையில் உள்ள நல்லிணக்கம் ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் நோக்கம் குறித்தும் பொதுமக்கள்இடையில் எடுத்து உரையாடினார்.
ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மாவட்ட காவல் துறைக்கும் பொதுமக்கள் இடையில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது..