ஈரோடு மாநகராட்சி 14வது வார்டில்அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.கச்சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி 14வது வார்டில் அமைந்துள்ள பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் மற்றும் வேட்பாளருக்கு ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி மாமன்ற உறுப்பினர் புனிதா சக்திவேல் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீடாகச் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். ஈரோடு மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் அமைச்சர் மற்றும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனத் தி.மு.க.வினர் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.