கள்ளக்குறிச்சியில் கேரளா செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்களின்  ஆட்டம் பாட்டம்

Loading



கள்ளக்குறிச்சியில் கேரளா செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்களின்  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற விநாயகர்  ஊர்வலம்.

 

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளின் மூன்றாம் நாளான கள்ளக்குறிச்சி நகர பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதிக்கு   கச்சிராயபாளையம் சாலை காந்தி சாலை  நான்கு முனை சந்திப்பு சேலம் சாலை வழியாக கவரை தெரு  சென்றடைந்து மீண்டும்  மந்தைவெளி பகுதிக்கு வந்தடைந்தது  விநாயகர் ஊர்வலத்தில் கேரள செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம் வந்தடைந்து  பின்பு அனைத்து விநாயகர் சிலைகளும் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையில் விநாயகர் சிலைகள் அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. விநாயகர்  சிலைகள் கரைக்கும்  இடங்களில் சிசிடிவி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலம்  கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares