அதிமுக கூட்டணி தேமுதிக சார்பில் கு.நல்லதம்பிமுரசு சின்னத்திற்கு தீவிரவாக்குசேகரிப்பு

Loading

திருவலாங்காடு ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு :

திருவள்ளூர் ஏப் 11 : திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக கூட்டணி தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் கொட்டும் முரசு சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  திருவலாங்காடு ஒன்றியம் திருவலாங்காடு, மணவூர், வீரராகவபுரம், சின்னமண்டலி, கிளாம்பாக்கம், பழையனூர், பாகசாலை, பொண்ணங்குளம், தொழுதாவூர், அத்திப்பட்டு,  ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஏப்ரல் 19-யில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  சிந்தித்து முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என திறந்த ஜிப்பில்  சென்று ஒட்டு சேகரித்தார்.அப்போது தொகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன், திருத்தணி சர்க்கரை ஆலை நவீன மயமாக்கப்படும், அதிநவீன மருத்துவமனை ஏற்படுத்தித் தரப்படும்  உள்ளிட்ட  வாக்குறுதி அளித்தார்.இந்தப் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.வி.ரமணா பேசும்போது, 2019-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தொகுதி பக்கமே வராததை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் மணவூர் மகா மற்றும் தேமுதிக மற்றும் கூட்டணி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முரசு சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *