சி தாகத்தை அறிந்து ஏழைகளுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும்1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை :

Loading

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் ஈத்கா மைதானத்தில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை :

திருவள்ளூர் ஏப் 11 : இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பை 30 நாட்கள் நோற்று நிறைவு செய்து ஈகைப் பெருநாள் அன்று புத்தாடை அணிந்து திருவள்ளூர் ஈத்கா மைதானத்திற்கு வந்து உற்சாகத்துடன் சிறப்பு தொழுகை செய்து, ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் யாத்திரை ஆகிய ஐந்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதத்தில் 30 நாள் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த 30 நாட்கள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு உணவு அருந்திவிட்டு அதன் பின்னர் மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் தாகம் தீர்க்க தண்ணீர் அருந்தாமல் ஐந்து வேளை தொழுகையை நிறைவு செய்து அடுத்தவர்கள் குறித்து புறம் பேசாமல் மற்ற அனைத்து தீய செயல்களை விட்டும் மனதை கட்டுப்படுத்தி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்.

அதன்மூலம் செல்வந்தர்கள் பசி தாகத்தை அறிந்து ஏழைகளுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும்.  அதே நேரத்தில் 5 வேலை தொழுகையை கடைபிடிப்பதும் மற்ற தீய செயல்களிலிருந்து தங்களை பாதுகாத்து ஆண்டு முழுவதும் நல்ல செயல்பாடுகளோடும் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் உணர்த்துகிறது.  மேலும் நோன்பு நோற்பார்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஃபித்ரா அரிசி ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதுவும் குறிப்பிட்ட கடமையாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோன்பு நோற்றார்கள் தாங்கள் இருக்கும் வீடு அவர்களுடைய தேவைக்கு மேல் இருக்கும் சொத்து அல்லது வங்கி இருப்பு தொகை ஆகியவற்றை கணக்கிட்டு நூறு ரூபாய்க்கு இரண்டரை ரூபாய் என கணக்கிட்டு அந்த தொகையை ஜகாத்தாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.  இதுவே இந்த புனித ரமலானின் சிறப்புகளாகும்.

இந்த ரமலான் பண்டிகையை ஈகை பெருநாள் எனவும் கூறுவார்கள். அரபி மொழியில் ஈகை என்பது பிறருக்கு கொடுத்து உதவுவது என்பது பொருளாகும். வானில் தோன்றும் பிழை கணக்கில் கொண்டு தொடங்கும் ரமலான் மாதம் மறுபிறை வந்தவுடன் நிறைவடைகிறது. அதன்படி இன்று  நாடு முழுவதும் புனித ரமலான் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி அனைவரும் அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து 5 மணிக்கு மசூதிக்கு சென்று தொழுகை நடத்துவார்.  அதன்படி திருவள்ளூரில் அமைந்திருக்கும் ஈத்கா மைதானத்திற்கு சென்று சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்கள்.  தொழுகை முடிந்தவுடன் ரமலான் பண்டிகையின் சிறப்பு குறித்து மதகுரு ஆற்றும் சிறப்புரையை கேட்ட பின்னர் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு தானம் செய்துவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *