ஊடகவியலாளர்களுக்கு அரசு வழங்கும் அங்கீகார அட்டையில் இரட்டடிப்பு செய்யும் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள்.
ஊடகவியலாளர்களுக்கு அரசு வழங்கும் அங்கீகார அட்டையில் இரட்டடிப்பு செய்யும் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை 2024 ஆம் ஆண்டிற்கான பத்திரிக்கையாளர் அங்கீகார குழு அமைத்து அரசாணை 178 இன் படி தமிழ்நாட்டில் உள்ள நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் செய்தி முகமைகள் ஆகியவைகளில் பணியாற்றும் ஊடக வியளாளர்களுக்கு அங்கீகாரை அட்டை வழங்கிட
புதியதாக மாற்றி அமைக்கப்பட்ட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு நிலை எண் 117 படி வெளியிடப்பட்டு அதில் 2023 -2024 ஆகிய ஆண்டுக்கான பத்திரிக்கையாளர் அட்டை விண்ணப்பங்களை பரிசீலிக்க பத்திரிக்கையாளர் அங்கீகார குழு அமைத்து அதில் 9 நபர்களை நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது. இந்த குழு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத சூழலில் இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு அரசு செய்தி துறை சார்பில் ஊடகவியலாளர்களுக்கு பத்திரிக்கையாளர் அங்கீகார அடையாள அட்டை வழங்கி வருகிறது பல ஆண்டுகளாக இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை பத்திரிகையாளர்களும் பத்திரிக்கையாளர் சங்கங்களும் நடத்தியதை நாம் அறிவோம்.
நீதிமன்றம் படியேறி இதற்கான உரிமையை நாம் பெற்று வந்திருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்களின் பரிசீலனையின் அடிப்படையில் அங்கீகார அட்டை வழங்குவது என்று அறிவித்திருந்த நிலையில் மாவட்ட தலைமை இடத்து செய்தியாளர்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி உள்ளனர்.
அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பிறகு ஊடகவியலாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கப்படும் என்று நீதிமன்றத்தின் மூலமாகவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பல மாவட்டங்களில் பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றுகிற ஊடகவியலாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை வழங்குவதில் செய்தி மக்கள் தொடர்பு துறை இரட்டடிப்பு செய்து வருவதாகவே புகார் எழுந்து வருகிறது. இடைத்தரகர்கள் மூலமாக பலருக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் வழங்குகிற கடிதத்தின் அடிப்படையில் அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் அதனை சரி பார்க்கவும் பரிசீலிக்கவும் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவும் கூட இரண்டு ஆண்டுகள் தான் செயல்படும் என்று அரசு தெரிவித்திருக்கும் நிலையில் எந்த அடிப்படையில் அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்குகிறது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஏபிஆர்ஓ மற்றும் பிஆர்ஓ தான் முடிவு செய்வதாக தெரிகிறது எங்கள் குழு விசாரித்ததில் ஏ பி ஆர் ஓ பத்திரிகையாளரிடத்தில் பணம் பெற்று அடையாள அட்டை கேட்பவர்களிடத்தில்,ஏதாவது ஒரு பிரிண்டரிடத்தில், பத்தாயிரம் காப்பி அடிப்பது போல் நீங்கள் ஒரு கடிதத்தை வாங்கி வந்து தாருங்கள் நான் அடையாள அட்டை தந்து விடுகிறேன் என்று கூறி வருகின்றனர். அப்படி சிலருக்கு அங்கீகார அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டும் இருக்கிறது.
ஆர்.என்.ஐ சர்டிபிகேட்டில் ஒரு பிரிண்டரும் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் வேறொரு பிரிண்டர் பெயரும் இடம்பெற்று இருப்பது தெளிவாக இருக்கிறது. அப்படி குளறுபடி உள்ளவர்களுக்கு கூட அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இப்படி ஆதாரங்கள் எங்கள் குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதால் இவர்கள் தில்லு முல்லு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும்இவர்கள் கொடுத்துள்ள அடையாள அட்டை நபர்கள் நான்கு பக்கம் அடித்து விட்டு 8 பக்கத்திற்கு பிரிண்டரிடம் இருந்து போலியாக கடிதம் தந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.இதை வேறொரு பத்திரிக்கையாளர் ஏ பி ஆர் ஓ விடம் கேட்கும் பொழுது அதையெல்லாம் உங்களுக்கு தேவையில்லை உங்களை மட்டும் பேசுங்கள் என்று மிரட்டும் தோரணையில் பேசுகிறார். உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி தான் இப்படி என்றால் பிஆர்ஓவிடம் சென்று கேட்போம் என்று கேட்டால் அவர் சொல்லுகிறார் நீங்கள் எல்லாம் பத்திரிக்கைக்கு கார்டே வாங்க முடியாது நீங்க ஏபிசி வாங்க வேண்டும் என்று கூறுகிறார். ஏ பி சி 10 ஆயிரம் காப்பி அடிப்பவர்களுக்கு ஏ பி சி எதற்கு வாங்க வேண்டும் இது கூட தெரியாத ஒரு அதிகாரியைஅரசுஅந்தத் துறையில் அமர்த்தியுள்ளது. அரசை உருவாக்குவதும் கவிழ்ப்பதும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதும் பத்திரிகை துறை தான் அந்த துறையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகள் அரசை கவிழ்க்கும் நோக்கோடு செயல்படுகின்றனர் தற்பொழுது தேர்தல் வரும் நேரம் என்பதால் பத்திரிகையாளர் இடத்தில் இதுபோன்று தவறான அணுகுமுறையை கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சில அதிகாரிகள் முயல்கின்றனர்.பி ஆர் ஓ சொல்லுகின்றார் 100 -200 காபி தான் அனைவரும் அடிக்கின்றனர் எங்களுக்கும் இது தெரியும் என்று சொல்லுகிறார் அப்படி இருக்கையில் எப்படி அனைவருக்கும் அடையாள அட்டையை புதுப்பித்து கொடுத்துள்ளார் என்பது மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.ஆர் என் ஐ ஆடிட்டிங் செய்யும் பொழுது 2000 பிரதி என்று ஆடிட் செய்துவிட்டு பத்தாயிரம் காப்பிக்கு மட்டும் எப்படி பிரிண்டர் கடிதம் கொடுக்க முடியும் இப்படியெல்லாம் போலியாக கடிதம் வாங்கி வைத்துக்கொண்டு பணத்தையும் பெற்றுக் கொண்டு அடையாள அட்டை கொடுப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையால் புதிய வழிகாட்டி விதிமுறைகள் 22-3-2023-தேதியில் அரசாணை நிலை எண் :31 படி ஆணையிடப்பட்டுள்ளது அது போகட்டும் செய்தி துறையால் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பெற்றுக் கொண்டுதான் அடையாள அட்டையை புதுப்பித்து தர வேண்டும் இப்படி இருக்க பணம் பத்தும் செய்யும் என்ற கோணத்தில் செய்தித்துறை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது
புதிய அடையாள அட்டை பழைய அடையாள அட்டை இரண்டு பேருக்குமே ஒரு சட்டம்தான் வந்துள்ளது ஆனால் இதையெல்லாம் மறந்து அதிகாரிகள் செயல்படுவது வெட்கக்கேடாக உள்ளது இந்த விவகாரம் பத்திரிகையாளர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தித்துறை
இயக்குனர் அவர்கள் மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களும் இதில் தலையிட்டு மீண்டும் ஒருமுறை அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து அடையாள அட்டை தவறான முறையில் கொடுத்திருந்தால் அதை திரும்ப பெற வேண்டும் என்பது அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின்சார்பிலும் அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பிலும் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்