நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்

Loading

வேலூர் மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை: இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற நரிக்குறவர் இன மக்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்

 PIB Chennai

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரிகரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக முகாம் நடைபெற்றது.

முகாமில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அவற்றின் பயன்களைப் பெறுவது தொடர்பாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கரிகரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டமான உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு  இணைப்பு வழங்கப்பட்டது.
இதில் பயன் பெற்ற ரஞ்சனி என்ற பெண் கூறுகையில், இதுவரை விறகு அடுப்பின் மூலமாகவே தாங்கள் சமையல் செய்து வந்ததாகத் தெரிவித்தார். தற்போது அரசுத் திட்டங்களின் பயன்களை விளக்கி தங்களது பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களும் தங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக  மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் எனும் உறுதிமொழிக்கு ஏற்ப மத்திய அரசின் திட்டங்களின் பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதிசெய்வதே இந்த நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் நோக்கமாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *