பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜெய்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இண்டிகோ விமானத்தில் பணியாளர்கள் மிகவும் முரட்டுத்தனமான நடந்து கொண்டதாகவும், அதன் சேவையும் மிகவும் மோசமாக இருந்ததாக கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.