புகையில்லா சமையலறை ஒவ்வொரு இல்லத்தரசியின் உரிமை: பிரதமரின் உஜ்வாலா திட்டம்

Loading

புகையில்லா சமையலறை ஒவ்வொரு இல்லத்தரசியின் உரிமை: பிரதமரின் உஜ்வாலா திட்டம்

 PIB Chennai

இந்தியாவிலுள்ள பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் நோக்கில் 2016 ம் ஆண்டு பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

குறிப்பாக கிராமப்புற மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் சமையலறை சிரமங்களை போக்கும் வகையில், வரப்பிரசாதமாக வந்ததுதான் இந்த பிரதமரின் உஜ்வாலா திட்டம். பாரம்பரிய சமையல் எரி பொருட்களின் பயன்பாடு கிராமப்புற பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தியது. விறகடுப்பால் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளை சந்தித்து வந்த பெண்களுக்கு எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்பு அவர்களின் வாழ்வில் ஒரு ஒளிவிளக்கை ஏற்றியது.

2020 மார்ச் மாதத்திற்குள் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கு முன்னதாகவே 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதமே அந்த இலக்கு எட்டப்பட்டது. புலம் பெயர்ந்த குடும்பங்களின் நலனுக்காக கூடுதலாக 1.6 கோடி இணைப்புகள் ஒதுக்கப்பட்டு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 9.6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் தற்போது நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்தப் பயணம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் பயணமாகும். தமிழ்நாட்டில் தற்போது சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, அரியலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.

பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2.0 மூலம் நவம்பர் மாதம் 27ம் தேதி வரை கிட்டத்தட்ட 1.8 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நடைபெற்ற இடங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு புதிய பயனாளிகள் இணைக்கப்படுகின்றனர். இந்த யாத்திரையில் மட்டும் இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளிகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் மத்திய அமைச்சரவை உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை 200 லிருந்து 300 ரூபாயாக அதிகரித்தது பெண்களின் செலவை மேலும் மிச்சப்படுத்தியுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *