கிராமப்புறங்களின் முன்னேற்றமே வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு அடித்தளமாகும்

Loading

கிராமப்புறங்களின் முன்னேற்றமே வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு அடித்தளமாகும்

 PIB Chennai

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் யாத்திரை தமிழ்நாட்டின் சேலம், அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த லட்சியப் பயணம் தமிழ்நாட்டிலுள்ள 12ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான கிராமங்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நமது நாடு கிராமங்கள் நிறைந்த நாடு. அங்குள்ள மக்கள் விவசாயத்தையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அதிநவீன விவசாய உபகரணங்கள் கிடைக்க செய்வதே அவர்களின் வேளாண் பணிகளை எளிதாக்கும். மானிய விலையில் உரங்கள், மழை அல்லது வறட்சியால் விவசாயம் பாதிக்கும் காலங்களில் அவர்களின் பயிர்களுக்குக் காப்பீடு உட்பட அனைத்தும் உரிய நேரத்தில் கிடைக்கச் செய்யும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் மூன்று தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இது இடைத் தரகர்களின் தொந்தரவின்றி அரசு வழங்கும் மானியம் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க வழி வகுத்துள்ளது.

இது கிராமப்புரங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு நிச்சயமாக உதவும்

    

 

    

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *