நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தின் கட்டமைப்பினை விரைந்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டி

Loading

நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தின் கட்டமைப்பினை விரைந்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு  அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசிய தலைவர் .டாக்டர் ஆ. ஹென்றி  அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

தங்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் நாளும் வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து சீர்தூக்கி செம்மைப்படுத்தி வளர்ச்சியும் எழுச்சியும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாநகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சீரற்ற வளர்ச்சிகளை ஒழுங்கு படுத்தவும், முழுமை திட்டங்களை கொண்டு ஒழுங்கு மற்றும் சீரான அபிவிருத்தி மற்றும் விரிவான திட்டங்கள் மூலம் கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியை விரைவுபடுத்தவும் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் உருவாக்க வேண்டும் என்கிற தங்களின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022 -ஆம் ஆண்டு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து, இதற்கான அரசாணை எண்கள்: 197, 198, 206, 207, 213 மற்றும் 257 -ஆக கடந்த ஆண்டு 2022 அன்று பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மேற்கண்ட மாநகரங்களில் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் கட்டமைப்பதற்கான எந்தவிதமான முயற்சியும் ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் எதையும் முன்னெடுக்காமல், அதற்கான அறிகுறியின்றி கிணற்றில் போட்ட கல்லை போன்று கிடப்பில் கிடக்கின்றது.

இதனை விரைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்கண்ட மாவட்டங்களில் அடிப்படை வளர்ச்சியும், உள்கட்டமைப்பும்  மேம்படும். கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையும் மாபெரும் வளர்ச்சியும் எழுச்சியும் பெறும். இதன் மூலம் அரசுக்கும் மக்கள் மத்தியில் நற்பெயரும் பெரும் வருவாயும் ஏற்படும். ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனை தங்கள் கூடுதல் கவனத்தில் கொண்டு மேற்கண்ட மாவட்டங்களில் விரைவில் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களை நிறுவுவதற்கும் அதன் கட்டமைப்புகளை விரைந்து முடித்து ஆலோசனைக் குழு மற்றும் திட்டமிடல் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து, விரைந்து தீர்வு காண வேண்டும் என கடிதம்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *