ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஒருநாள் கவனயீர்ப்பு உண்ணாவிர போராட்டம்.

Loading

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஒருநாள் கவனயீர்ப்பு உண்ணாவிர போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாநிலத் தலைவர் சோ ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது அப்போது  செய்தியாளர் சந்தித்த மாநில தலைவர் ஜெயக்குமார் அவர்கள் சிபிஎஸ் ஐ ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் வழங்கிடவும் முறையாக வழங்காத டிஏ ஈஎல் சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி 1996 பனி மூப்பு பட்டியலில் உள்ள அனைவருக்கும் பயிற்சி முடித்த நாளிலிருந்து முன் தேதியிட்டு சுகாதார ஆய்வாளர் நிலை ஒன்று பதவி
உயர்வு வழங்கிடவும் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்றும் மேலும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணை 337ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட  வேண்டும் என்று தெரிவித்தார் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவத்துறை பணியாளர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ ஆர் சாந்தி ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் ஏ பாஸ்கர் மாநில பொதுச் செயலாளர் பிஎஸ் சங்கரன் எஸ் சிவகுரு ஆர் கோபிநாத் எம் வைதலிங்கம் கே பரசுராமன் பி விஜயகுமரன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *