அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்

Loading

தூத்துக்குடி 25வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.
      இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
      இந்நிலையில் மாநகராட்;சி 25வது வார்டுக்குட்பட்ட புதுத்தெரு, அரசமரம் அருகில் வைத்து பகுதி பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்ததில் ஊனமுற்ற பெண்மணி 3சக்கர வண்டி வேண்டியும் அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பாரம் அமைத்து மின்சாரம் நல்ல முறையில் வழங்க வேண்டும். அண்ணா காலணி பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடியை புதிதாக கட்டித்தருமாறு அங்கன் வாடி ஊனமுற்ற பணிப்பெண் மனு அளித்தார். கனிவோடு அனைவரது மனுக்களையும் பெற்றக்கொண்ட பின்னர் புனித ஜார்ஜ் தெரு, உள்ளிட்ட வார்டுபகுதிகளில் நடந்தே சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு உதவி செய்திடுமாறு கேட்டனர். உதவி செய்வதாக தெரிவித்தார்.
   பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.
     நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், காங்கிரஸ் கவுன்சிலர் எடின்டா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர் அன்டோ, மகிளா காங்கிரஸ் செயலாளர் பீரித்தி வினோத், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், தொழிலதிபர் ஆறுமுகசாமி, மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *