மின்சாரம் தாக்கி கொன்ற யானையை மறைத்த   ” மர்மநபர் ” கைது

Loading

மின்சாரம் தாக்கி கொன்ற யானையை மறைத்த   ” மர்மநபர் ” கைது.!ஈரோடு மாவட்டம் பர்கூர் வன சரகம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் விண்வெளி அமைத்து சிக்கிய யானை மர்மமான முறையில் புதைத்து மறைத்ததால் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இதற்கு மூல காரணமான மர்ம நபர் கைது செய்யப்பட்டார்   ஈரோடு வனக்கோட்டம், பர்கூர் வனச்சரகம், செங்குளம் பிரிவு, கோவில் நத்தம் பகுதிக்கு உட்பட்ட ,கோவில் நத்தம் குக்கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் காட்டு யானையினை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 29 ம் தேதி  பர்கூர் வனச்சரக அலுவலர்  பிரகாஷ் அவர்களின் தலைமையில் வனப் பணியாளர்கள்  அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சம்பவ இடத்தினை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது நிலத்தில் புதைத்து வைத்திருந்த காட்டு யானையின் பாகங்கள்  எலும்பு ,மண்டை ஓடு ,கால் பாதம் ,யானையின் முடி மற்றும் தந்தம் ஆகியவை கண்டுபிடித்தனர் இச்சம்பவம் குறித்து  மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனக்கோட்டம்,  ஈரோடு அவர்களுக்கு தகவல் தெரிவித்து, நேற்று முன்தினம் 30ம் தேதி இக்குற்றத்தில் ஈடுபட்ட கோவில் நத்தம் கிராமத்தினை சேர்ந்த மாதையன் என்பவரது மகன் சடையப்பன்  (58)  என்பவரை கைது செய்து, பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின்படி பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார் மின்வேளியில் சிக்கியதை மர்மமான முறையில் யானையை புதைத்தது தெரிய வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *