முகநூலில் பழகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக நூதன மோசடி வெளிநாட்டு வாலிபர் கைது.
![]()
திண்டுக்கல்லில் முகநூலில் பழகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக நூதன மோசடி.
வெளிநாட்டு வாலிபர் கைது.
திண்டுக்கல் ஆகஸ்ட் 08
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவரிடம் வெளிநாட்டு வாலிபர் முகநூலில் பழகி கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக கடந்த மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மஅறிவுரையின்படி திண்டுக்கல் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் மேற்பார்வையில், ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் தலைமையில், சார்பு ஆய்வாளர் ரைஹானா மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த உச்சனா(35) என்பவரை சைபர் கிரைம் தனிப்படையினர் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அவர் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

