மதுரை திமுக மேயர் பங்களா குப்பைகளை அள்ளி தூய்மை பணி செய்த மாநகர் பாஜகவினர்
மதுரை திமுக மேயர் பங்களா குப்பைகளை அள்ளி தூய்மை பணி செய்த மாநகர் பாஜகவினர்மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தல்லாகுளம் மண்டல் பொதுச் செயலாளர் சீதா தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் முன்னிலையிலும் அண்ணா நகர் ஆலமரம் ஸ்டாப் பகுதிகளில் தூய்மைபணி மற்றும் நிலவேம்பு பவுடர், மாஸ்க், சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, அப்பகுதி பள்ளி குழந்தைகள், பேருந்து பயணிகள், சாலை பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் கொரானா குறித்து விழிப்புணர்வு மகா சுசீந்திரன் அவர்கள் நடத்தி பின்பு தூய்மை பணி நடைபெற்று இருக்கும்போது அப்பகுதி பொதுமக்கள் பலர் தங்கள் பகுதியில் குப்பைகள் அள்ள மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாகவும், நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அக்கரையிலாத மேயரும், அவரது பங்களாவில் கூட குப்பைகள் அள்ளப்படவில்லை என புகார் அளித்தனர், மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் தாமரை சேவகர்கள் குழுவினர் உடனடியாக மேயர் பங்களா சுற்றுபகுதி குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது, நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சத்யம் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மெகர் நிஷா, மகளிர் அணி மாவட்ட தலைவர் ஓம் சக்தி தனலட்சுமி, மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் முரளி பாஸ்கரன், சிறுபான்மை அணி மாநில செயலாளர் சாம் சரவணன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன், விசைத்தறி நலவாரிய மாநில செயலாளர் மணவாளன், காளவாசல் மண்டல் தலைவர் பிசாசைவேல், பி பி குளம் மண்டல் தலைவர் மாணிக்கம், 70வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன், தாமரை சேவகர்கள் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முத்துக்குமார், ஐட்டி விங்க் மாநில செயலாளர் விஸ்வநாத், ஐட்டி விங்க் மாவட்டத் தலைவர் மணிகண்டன், ஐட்டி விங்க் மாவட்ட துணைத்தலைவர் முருகேஷ் பாண்டியன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் தாமரை சேவகர் குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.