யாதவர் சமுதாய மண்டகப்படி வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகேயுள்ள வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிப் பகுதியில் அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கி பங்குனி மாதம் வரை ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஒவ்வொரு சமுதாயத்தினர் என்ற வகையில் கொடை விழாக்கள் எனப்படும் சமுதாய மண்டகப்படித் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் தை மாதம் முதல் செவ்வாய் கிழமையிலிருந்து ஒவ்வொரு வாரமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. பங்குனி முதல் செவ்வாய்க்கிழமையான மார்ச் 21 அன்று யாதவர் சமுதாய மண்டகப்படி வெகு சிறப்பாக நடைபெற்றது. திங்கள் கிழமை பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தக்குட, பால்குட அழைப்பு நடைபெற்றது. மதியம் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு அனுமா நதியிலிருந்து தீர்த்தக்கரகத்தை கோவில் அர்ச்சகர் சொ.முப்புடாதி பிள்ளை சுமந்து வர மண்டகப்படிதாரர்களான யாதவர் சமுதாயத்தினர் மேளதாளங்கள் பேண்டு வாத்தியம் முழங்க ரத வீதிகளில் அக்னிசட்டி ஏந்தியும் முளைப்பாரி சுமந்தும் அழைத்து வந்தனர். இரவு முப்புடாதி அம்மனுக்கு தீர்த்தக்கரக அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனைகளும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முப்புடாதி அம்மனை மண்டகப்படிதாரர்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். யாதவர் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு வில்லிசையில் புகழ் பெற்று விளங்கக் கூடிய சமூக வலை தளங்களில் வில்லிசை இளம்புயல் என்று அழைக்கப்படுபவரும் மகளிர் தினத்தில் போத்தீசின் தங்கமகள் விருது பெற்ற சாதனையாளருமான தென்காசி மாவட்டம் அச்சங்குன்றம் செல்வி.மாதவி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று நைய்யாண்டி மேள இசையில் கலக்கி வரும் நாதஸ்வர சக்கரவர்த்தி இலஞ்சி செல்வராஜ் குழுவினரின் நைய்யாண்டி மேளமும் சிறப்பாக அமைந்திருந்தது. புதன்கிழமை காலை கிடாய் வெட்டு நடைபெற்றது. மண்டகப்படி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வடகரை யாதவர் சமுதாயத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். அச்சன்புதூர் காவல் நிலைய அதிகாரிகளும் காவலர்களும் திருவிழாற்கான பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற் கொண்டனர்.