கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி க் கல்வி மையத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்

Loading

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பல்லவராயன்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தன்னார்வலர் பூமா வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு மகளிர் தின குறித்து பேசும் போது மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். மேலும் பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். மேலும் பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை  உலக மகளிர் தினமாக  ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) “கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்” என்பதாகும்.
சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.இதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று புதிய கருப்பொருளை ஐ.நா. அவை அறிமுகம் செய்து வருகிறது. பெண்களின் சாதனைகள் குறித்து பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள், சமத்துவத்தின் நோக்கம், பெண்ணுரிமை உள்ளிட்டவை குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டின் கருப்பொருள் :அனைவருக்கும் டிஜிட்டல் :”பாலின சமத்துவத்திற்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பம்” என்ற பெயரில் இந்த ஆண்டின் கருப்பொருள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.பாலின சமத்துவத்தை நாம் காப்பாற்றுவதுடன், பெண்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகள் குறித்து இந்த நாளில் கொண்டாடுகின்றனர். சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஆணும், பெண்ணும் சமம் என்ற சிந்தனைகளை ஊக்குவிக்கின்றனர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் துர்கா, பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *