முதலமைச்சர் அவர்களின்” நான் முதல்வன் திட்டத்தின்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்களின்” நான் முதல்வன் திட்டத்தின்முத்தாய்ப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் “கல்லூரி களப்பயணம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நீலகிரி மாவட்டத்தின் சார்பாக பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கலை அறிவியல் மருத்துவம் சார்ந்த,கல்லூரி மேற்படிப்பிற்கு தேர்ந்தெடுக்க முன்னோடியாக களப்பயணம் 27-02-2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் அறிவுரையின் படி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில்அரசு கலைக் கல்லூரி உதகை, Emerald Heights மகளிர் கல்லூரி, Providence கல்லூரி குன்னூர்,அரசு கலைக்கல்லூரி கூடலூர், அரசு வனக்கல்லூரி மேட்டுப்பாளையம்,மற்றும் உதகை அரசு மருத்துவக் கல்லூரிகளில்,380 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மேற்படி கல்லூரி பேராசிரியர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.மருத்துவக் கல்லூரியின் Dean Dr.மனோகரி அவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்வுகளும் மேற்படி மருத்துவம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும் மருத்துவம் என்பது என்பது என்ன?
ஆர்பணிப்பு, சேவை, வாழ்நாள் முழுவதும் கற்றல் போன்ற நிகழ்வுகளைஎடுத்துரைத்தார்.உடன்Dr.கார்த்திகேயன், Dr.பாலசுப்பிரமணி உடனிருந்தனர்.   அரசு மருத்துவ கல்லூரியின் வெவ்வேறு துறைகளான உயர்வேதிதுறை,உடற்கூறு இயல், போன்ற துறை நிகழ்வுகளை தெளிவாக முதலாமாண்டு மாணவர்களும் பேராசிரியர்கள்,துணை பேராசிரியர்கள்,NEET தேர்வை எப்படி எதிர்கொள்வது, எப்படி தேர்ந்தெடுப்பது, என்னென்ன பாடங்கள் உயிரியல், வேதியல், இயற்பியல், மதிப்பெண்கள் எவ்வாறு பிரித்து படிப்பது மருத்துவம4 1/2 ஆண்டுகள் எவ்வாறு படிப்பது போன்ற விளக்கங்களும், Research Lab,Dissection Lab, Bio chemistry Lab,எவ்வாறு செயல்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது.மேலும் வனக்கல்லூரி மேட்டுப்பாளையம்,மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான,பல்வேறு படிப்புகளில் பாடங்களில் தேர்ந்தெடுக்கவும், வேலை வாய்ப்புகள் தொடர்பாகவும், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு, எடுத்துரைத்தார்.அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மேலும் பெற்றோர்கள்,மற்றும் மாணவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *